இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
இந்து சமய அறநிலையத்துறையின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து நாகப்பட்டினம் இந்து சமய அறநிலைத்துறை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு கண்டன அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ்.கணபதி தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு முழுவதும் அறநிலையத்துறை பொறுப்பில் உள்ள கோயில்கள், வஃக்ப்போடு, மடம், அறக்கட்டளைக்கு சொந்தமான இடங்களில் காலம் காலமாக வீடு கட்டி குடியிருப்பவர்கள், சிறுகடை வைத்திருப்போர், சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ,கூடுதலான குத்தகை, பல மடங்கு உயர்த்தப்பட்ட வாடகை ,
சமய நிலங்களை பயன்படுத்வோர்கள் மீது அத்துமீறிய நடவடிக்கை எடுத்துவருவதை கண்டித்து நடைபெற்ற ஆர்பாட்டத்தில் சிபிஐஎம் நாகைமாவட்ட செயலாளர் வீ.மாரிமுத்து கண்டன உரையாற்றினார்.
இந்த விடியோவை பாருங்க : ஊரே வியக்கும் அளவில் அனகை ஜெய்பிரதர்ஸ் கொண்டாடிய முன்னாள் நகர மன்ற தலைவரின் பிறந்தநாள் விழா

கொரோனா நோய் பெரும் தொற்று காலம் முழுவதற்குமான அடிமனை வாடகை முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும். புதிய வாடகை நிர்ணயிக்க தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரைகளை வெளியிட வேண்டும். காலங்காலமாக கோயில் நிலங்களில் குத்தகை சாகுபடி செய்யும் ஏழை விவசாயிகளை மறு ஏலம் என்ற பெயரில் நிலத்தை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் விவசாயிகளுக்கு ஆர்.ட்டி.ஆர்.பதிவு செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க : உடல் பருமனான பெண்களே.. கோடையில் ஒல்லியாக இருக்க எடுக்க வேண்டிய ஆடைகள் இது!

இந்நிகழ்வில் மாநில பொருளாளர் எஸ்.துரைராஜ்.விச மாநிலத் துணைதலைவர் வீ.சுப்ரமணியன். விச மாவட்டசெயலாளர் கோவை.சுப்ரமணியன். அணைத்து சமய நிலங்களை பயண்படுத்வோர் சங்க நாகைமாவட்ட செயலாளர் வி.எஸ்.பன்னீர் செல்வம்,மயிலாடுதுறை மாவட்டசெயலாளர் ஏ.ஆர்.விஜய். உள்ளிட்டோர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது TopNewsThamizh என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…