Homeஇன்றைய செய்திகள்தேவூர் திரௌபதி அம்மன் ஆலய மாசி பெருவிழா

தேவூர் திரௌபதி அம்மன் ஆலய மாசி பெருவிழா

Date:

https://news.google.com/publications/CAAqBwgKMIeylgswmtetAw?hl=ta&gl=IN&ceid=IN%3Ata

தேவூர் திரௌபதி அம்மன் ஆலய மாசி பெருவிழாவில் அம்பாள் சிறப்பு வீதியுலா காட்சியில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் உற்சாகமாக நடனம்

மாவட்டம் கீழவேளூர் அடுத்துள்ள தேவூரில் உள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலயத்தில் மாசி பெருவிழா கடந்த 20 ஆம் தேதி பூச்சொரிதலுடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தது. இந்நிகழ்வில் விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அம்பாள் வீதி உலா காட்சி இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக அம்மனுக்கு பால்,பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து ‌ மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக வந்த அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து வீடுகள் தோறும் வழிபாடு நடத்தினர். வீதியுலா காட்சியின் போது ஏராளமான இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.

READ
ஈரோட்டில் நடந்தது இடைத்தேர்தல் அல்ல தமிழக முதலமைச்சரின் ஆட்சிக்கு மக்கள் எடை போடுகிற தேர்தல் - மீன் வளர்ச்சி கழகத் தலைவர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது TopNewsThamizh என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

https://news.google.com/publications/CAAqBwgKMIeylgswmtetAw?hl=ta&gl=IN&ceid=IN%3Ata

அதிகம் படித்தவை

லேட்டஸ்ட் நியூஸ்

Top Contets