Homeஇன்றைய செய்திகள்தமிழ் நாடுஉலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் மேகாலயா மாநில முதலமைச்சர் கான்ராட் கே சங்மா தரிசனம் 

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் மேகாலயா மாநில முதலமைச்சர் கான்ராட் கே சங்மா தரிசனம் 

Date:

https://news.google.com/publications/CAAqBwgKMIeylgswmtetAw?hl=ta&gl=IN&ceid=IN%3Ata

உலக புகழ்பெற்ற பேராலயத்தில் மேகாலயா மாநில முதலமைச்சர் கான்ராட் கே சங்மா தரிசனம் ; பேராலய நிர்வாகம் சார்பாக வரவேர்ப்பளித்து மரியாதை சிறப்பு திருப்பலி:

மாவட்டம் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் மேகாலய மாநில முதல்வர் இன்று புனித ஆரோக்கிய மாதாவை தரிசனம் செய்தார். நேற்றைய தினம் டெல்லியில் இருந்து விமானம் மூலம் வந்த மேகாலய முதல்வர், சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வருகைதந்து அங்கிருந்து சாலை மார்கமாக இன்று காலை வேளாங்கண்ணி வருகை புரிந்தார்.

பின்னர் இன்று காலை தனது மனைவி மெஹ்தாப் மற்றும் குடும்பத்தினருடன் மேகாலயா மாநில முதல்வர் கான்ராட் கே சங்மா வேளாங்கண்ணி மாதாவை தரிசனம் செய்தார். பேராலயம் வந்த மேகாலயா முதல்வருக்கு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மற்றும் பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் பங்குத்தந்தை அற்புதராஜ் பேராலய நிர்வாகம் சார்பாக சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டு சிறப்பு திருப்பலியில் கலந்துகொண்டனர் அவர்களுக்கு பேராலயம் சார்பில் மாலை சுற்றப்பட்ட மெழுகுவர்த்தி பிரசாதமாக வழங்கப்பட்டது

அதனை தொடர்ந்து தரிசனத்தை முடித்த மேகாலயா முதல்வர் சாலை மார்க்கமாக திருச்சி விமான நிலையம் சென்று பின்னர் அங்கிருந்து,விமானம் மூலம் பெங்களூர் செல்ல இருக்கிறார். மேகாலயா மாநில முதல்வரின் வருகையை அடுத்து மாவட்ட காவல்துறை சார்பாக வேளாங்கண்ணி பேராலயத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

நாகை மாவட்ட செய்தியாளர் செ.சீனிவாசன்

READ
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மாவட்ட மீனவர்கள் 12 பேர் விசைப்படகுடன் கைது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது TopNewsThamizh என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

https://news.google.com/publications/CAAqBwgKMIeylgswmtetAw?hl=ta&gl=IN&ceid=IN%3Ata

அதிகம் படித்தவை

லேட்டஸ்ட் நியூஸ்

Top Contets