Homeஇன்றைய செய்திகள்தமிழ் நாடுநாகூர் தர்காக்கு சொந்தமான பழங்கால கல் மண்டபம் மீட்பு

நாகூர் தர்காக்கு சொந்தமான பழங்கால கல் மண்டபம் மீட்பு

Date:

https://news.google.com/publications/CAAqBwgKMIeylgswmtetAw?hl=ta&gl=IN&ceid=IN%3Ata

நாகூர் தர்காக்கு சொந்தமான பழங்கால கல் மண்டபம் மீட்பு – நாகூர் தர்கா நிர்வாகத்தினர் தொடர் முயற்சி பெரும் பலன்.

தமிழகமெங்கும் உலகப்புகழ்பெற்ற நாகூர் தர்காவிற்க்கு பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்கள் பல தனி நபர்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அதனை ஒழுங்குபடுத்த கோரி மாண்புமிகு நிதிமன்றம் உத்தரவு பிறப்பித்து நாகூர் தர்காவிற்க்கு இடைக்கால நிர்வாகிகளாக அலாவுதீன் மற்றும் அக்பர் ஆகிய அதிகாரிகளை நியமித்தது.

நாகூர் தர்காக்கு சொந்தமான பழங்கால கல் மண்டபம் மீட்பு

5 ஆண்டு காலம் நாகூர் தர்காவை நிர்வாகித்த இவர்கள் எந்த ஒரு சொத்தினையும் கண்டறியவில்லை. கடந்த (2022) வருடம் மாண்புமிகு உயர்நீதிமன்றம் இவர்களை அதிரடியாக நீக்கி பரம்பரை போர்டு ஆப் டிரஸ்டிஸ் வசம் தர்கா நிர்வாகத்தை ஒப்படைத்தனர். பரம்பரை போர்டு ஆப் டிரஸ்டிஸ் தங்களுக்குள் அல்ஹாஜ் டாக்டர் செய்யது காமில் சாஹிப் என்பவரை தலைமை அறங்காவலாரக தேர்வு செய்து நிர்வாகம் செய்ய துவங்கினார்கள். நிர்வாகிகள் பணியினை முடுக்கி தர்கா சொத்துக்களை கண்டறியும் பணியில் இறங்கினார்கள்.

இதையும் படிங்க : உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் மேகாலயா மாநில முதலமைச்சர் கான்ராட் கே சங்மா தரிசனம்

நாகூர் தர்காக்கு சொந்தமான பழங்கால கல் மண்டபம் மீட்பு

அதன்படி திருவாருர் மாவட்டம், சீர்காழி மாவட்டம் என பல இடங்களில் சுமார் 8 லட்சம் சதுர அடி தர்கா நிலம் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டு வருடாந்திர குத்தகைக்கு விடப்பட்டு தர்கா வருவாய் பெருக்கப்பட்டது.

இதனிடையில் நாகூர் கால்மாட்டு தெரு / பீரோடும் தெரு சந்திப்பில் பழங்கால கல் மண்டபம் ஒன்று உள்ளது. நாகூர் ஆண்டவரை தரிசனம் செய்ய கட்டிகொடுக்க பட்டதாக கூறப்படுகிறது. நாகூர் தர்கா நிர்வாகம் இதனை தர்கா சொத்து என பழங்கால கோப்புகளின் அடிப்படையில் கூறியது. அதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் மணு அளித்தது.

மாவட்ட ஆட்சியர் அவர்கள் வட்டாச்சியரை உரிய நடவடிக்கை எடுக்ங உத்தரவிட்டார். உரிய கால அவகாசத்தில் நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் நாகூர் தர்கா மானேஜிங் டிரஸ்டி அல்ஹாஜ் டாக்டர் செய்யது காமில் சாஹிப் இது தர்கா சொத்து இதனை உடனடியாக பட்டா பெயர் மாற்றி தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் மீது உயர்நீதிமன்றத்தில் ரிட் வழக்கு எண் 5674/2023 தொடர்ந்தார்.

இந்த விடியோவை பாருங்க: மாந்தை கருப்பூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா

நாகூர் தர்காக்கு சொந்தமான பழங்கால கல் மண்டபம் மீட்பு

இந்த வழக்கானது கடந்த பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் நான்கு வாரகாலம் அவகாசம் கோரப்பட்டது. அதன் பின்னர் உரிய விசாரணை மேற்கோண்டு மாவட்ட ஆட்சியர் பட்டா மாற்ற ஆணை பிறப்பித்து நாகூர் தர்கா கல்மண்டபம் நாகூர் தர்கா சொத்து என பட்டா வழங்கப்பட்டது. இந்த கல் மண்டப இன்றைய சந்தை மதிப்பு சுமார் 50 லட்சத்துக்கு மேலாகும். தர்கா அலுவலர்கள், தர்கா பொறியாளர் நேற்றைய தினம் இந்த இடத்தினை பார்வையிட்டு நில அளவினை உறுதி செய்தனர்.

READ
நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறந்து விழா
மீட்கப்பட்ட கல் மண்டபம்

இந்த கல் மண்டபத்தினை நாகூர் தர்கா சொத்து என அரசு கெட்ஜட்டில் சேர்க்கும் பணி நடைபெறுவதாகவும், மீட்கப்பட்ட இந்த இடத்தினை தர்கா நலனுக்காக விரைவில் அபிவிருத்தி செய்யப்படும் என தர்கா மானேஜிங் டிரஸ்டி அல்ஹாஜ் டாக்டர் செய்யது காமில் சாஹிப் கூறினார். மேலும் நாகூர் தர்கா பெயரில் தங்களது பகுதியில் ஏதேனும் சொத்துக்கள் இருப்பது தெரியவந்தால் பொதுமக்கள் தாமாக முன்வந்து நாகூர் தர்கா அலுவலகத்தில் தெரியபடுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது TopNewsThamizh என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

https://news.google.com/publications/CAAqBwgKMIeylgswmtetAw?hl=ta&gl=IN&ceid=IN%3Ata

அதிகம் படித்தவை

லேட்டஸ்ட் நியூஸ்

Top Contets