மறைந்த நாகை நகர திமுக முன்னாள் செயலாளர் போலீஸ் பன்னீர் திருவுருவப் படத்தை அமைச்சர் திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினர்.
நாகப்பட்டினம் நகர திமுக முன்னாள் செயலாளரும் மூத்த திமுக நிர்வாகியான போலீஸ் பன்னீர் கடந்த பிப்ரவரி 7.ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.
இதைத்தொடர்ந்து நாகை நகர திமுக மற்றும் மாவட்ட திமுக சார்பில் இன்று அவரது திருவுருவப் படம் திறப்பு விழா நாகையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நாகை நகர மன்ற தலைவரும் நகர திமுக செயலாளருமான இரா.மாரிமுத்து முன்னிலையிலும் நாகை மாவட்ட திமுக செயலாளரும் தமிழக மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவருமான கெளதமன் தலைமையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று போலீஸ் பன்னீர் திருவுருவப் படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் தட்கோ தலைவர் மதிவாணன், சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜன்,வடவூர் ராஜேந்திரன்,இல.மேகநாதன், மாவட்ட திமுக பொருளாளர் லோகநாதன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் மறைந்த போலீஸ் பன்னீர் உறவினர்கள் பங்கேற்று அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது TopNewsThamizh என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…